Local

அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தோல்வி – சபையில் இன்று பதிலடி கொடுத்தார் பிரதமர்!

அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு நிறைவேற்றப்படாவிட்டாலும் அமைச்சுக்களின் நடவடிக்கைகளில் எந்தவித பாதிப்பும் ஏற்பட மாட்டதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (29)  பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, வஜித அபேவர்த்தன ஆகியோரின்  கீழ் உள்ள அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள்  நாடாளுமன்றத்தில் நேற்று குழுநிலை வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டன.

இதுகுறித்து இன்று சபையில் கருத்து வெளியிட்ட பிரதமர்,

” ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சபையில் இருக்காததன்காரணமாகவே அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க , வஜிர அபேவர்த்தன ஆகியோரின் அமைச்சுக்களுக்கான வரவு செலவு திட்ட குழு நிலை ஒதுக்கீடு சபையில் தோல்வி அமைந்தது.

இந்த அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் திருத்தங்களுடன் மீண்டும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றி கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். இதை பெரிய பிரச்சினையாக கருதவேண்டியதில்லை.” என்றார்.

அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல

இது குறித்து கருத்து வெளியிட்ட சபை முதல்வரான கிரியல்ல,

” உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சுக்கும், பெருநகரங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கும் அடுத்த மாதம் 30ஆம் திகதி வரை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனால், அமைச்சுக்களின் நடவடிக்கைகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ” என்றார்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading