Local

10ஆம் திகதி நாடு திரும்புகிறார் ரணில்! – அவசர கூட்டத்துக்கும் ஏற்பாடு

நோர்வே மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 10 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளார்.


நாடு திரும்பிய கையோடு ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்றை நடத்தவுள்ளார்.

நாடாளுமன்றக்கட்டத் தொகுதியிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை எப்படியாவது பதவிநீக்கம் செய்துவிட வேண்டும் என்பதில் கூட்டரசிலிருந்து வெளியேறிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 15பேர்கொண்ட உறுப்பினர்கள் குறியாக இருக்கின்றனர். இதற்காக மஹிந்த அணியின் உதவியையும் நாடியுள்ளனர்.

அத்துடன், இடைக்கால அரசு அமைப்பது குறித்த பேச்சுகளும் ஆரம்பமாகியுள்ளன. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே – நாடு திரும்பிய கையோடு பிரதமர் கூட்டம் நடத்தவுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading