Local

பொலிஸ்மா அதிபர் கைதாகக் கூடுமாம்! – ஜனாதிபதி கூறுகின்றார்

பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர கைதாகக் கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனஅமைச்சரவைக் கூட்டம் நேற்றுமுன்தினம் நடந்தபோது நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்து பேசப்பட்டன .

அப்போது பேசிய ஜனாதிபதி மைத்திரி, தாக்குதல் சம்பவங்கள் பாதுகாப்புக் குறைபாடுகளால் நடந்துள்ளதால் பொலிஸ்மா அதிபர் பதவி விலக வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

“நான் அவரைப் பதவி விலகக் கேட்டுள்ளேன். ஆனால், அவர் இன்னமும் அதனைச் செய்யவில்லை.

இப்போது நான் நியமித்த குழு பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விசாரணை நடத்துகின்றது. அதில் குற்றம் கண்டுபிடிக்கப்பட்டால் பொலிஸ்மா அதிபர் கைதுசெய்யப்படலாம்.

அதற்கு முன் இவர் பதவி விலகுவது நல்லது” – என்றும் அமைச்சரவையில் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி.

‘புர்கா’வை தடை செய்வது குறித்தும் இங்கு பேசப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading