Local

காஷ்மீர் தாக்குதலுக்கு பிரதமர் ரணில் கடும் கண்டனம்!

காஷ்மீரில் இந்தியாவின் துணை இராணுவத்தின் வாகனத் தொடரணி மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 50 வரையான துணை இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தால் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்குமிடையிலான உறவில் விரிசலும் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானை மையப்படுத்தி இயங்கும் பயங்கரவாத அமைப்பொன்றே தாக்குதலுக்கு உரிமை  கோரியுள்ளது.

தீவிரவாத  செயற்பாட்டுக்கு கண்டம் வெலுத்துவருகின்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது டுவிட்டர் பக்கத்தில்,

”  காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் நடத்தப்பட்ட இந்த கொடூரமான தற்கொலை தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன்.

1989இல்  இருந்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் இதுவே மிகவும் மோசமான தாக்குதல் ஆகும்.

இராணுவ வீரர்களை இழந்து தவிக்கும் அவர்களின் குடும்பத்திற்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என  குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading