Local

விண்ணில் பாய்ந்தது ‘இராவணா-1’!

இலங்கையின் முதலாவது செய்மதி ‘இராவணா-1’ இன்று விண்வெளிக்கு அனுப்பட்டது. நாளை (19) மாலை 6.30 மணியளவில் விண்வௌியை அடையவுள்ளது.

கிழக்கு வேர்ஜினியா கடற்கரையில் உள்ள நாசாவின் வலூப் ஏவுதளத்தில் இருந்து  அதிகாலை 2.16 மணிக்கு இந்தச் செய்மதி ஏவப்பட்டது.

ஆர்தர் சி கிளார்க் நிலையத்தைச் சேர்ந்த, இலங்கையின்ஆய்வு விஞ்ஞானிகளான தரிந்து தயாரத்ன,

துலானி சமிக்கா ஆகியோரால், ஜப்பானின் கையூஷூ  தொழில்நுட்ப நிறுவகத்தில் இந்த இராவணா-1 செய்மதி, வடிவமைக்கப்பட்டது.

இலங்கை மற்றும் அயல் நாடுகளைப் படம் பிடிக்கக் கூடிய வசதிகள் இந்த செய்மதியில் உள்ளன. இது 11.3 செ.மீ x 10 செ.மீ. x 10 செ.மீ அளவுடையதும், 1.05 கிலோ எடையுள்ளதும் ஆகும்.

சுமார் ஒன்றரை ஆண்டுகள் இந்தச் செய்மதி செயற்படக் கூடியது.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading