Local

11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம் – நீதிமன்றில் சரணடைந்தார் பாதுகாப்பு பிரதானி!

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல்  ரவீந்திர விஜேகுணவர்த்தன, கொழும்பு கோட்டே நீதிவான் நீதிமன்றத்தில் இன்று முற்பகல் சரணடைந்தார்.

கொழும்பில் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், அட்மிரல்  ரவீந்திர விஜேகுணவர்த்தனவைக் கைது செய்து நீதிமன்றில் நிறுத்துமாறு முன்னதாக கோட்டே நீதிவான், குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டிருந்தார்.

நேற்று, அவருக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பாணை விடுத்திருந்த நிலையில், அந்த விசாரணைக்கு முன்னிலையாகாத, அட்மிரல்  ரவீந்திர விஜேகுணவர்த்தன இன்று நீதிமன்றில் முன்னிலையாகி சரணடைந்தார்.

2008 ஆம் ஆண்டு வௌ்ளை வேனில் இளைஞர்கள் உள்ளிட்ட 11 பேரைக் கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான லெப்டினன் கமான்டர் பிரசாத் சந்தன ஹெட்டியாராச்சி நீதிமன்றத்தில் ஆஜராகாமையால் தலைமறைவாவதற்கு அப்போதைய கடற்படைத் தளபதியாக இருந்த ரவீந்திர விஜேகுணரத்ன உதவி புரிந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading