Local

மைத்திரிக்கு எதிராக சூழ்ச்சி செய்யவில்லை! – புரட்சிக்குழுவை ஊக்குவிக்கவும் இல்லை!! – ரெனினோல்ட் குரே அறிவிப்பு

சுதந்திரக்கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக  எந்தவொரு சூழ்ச்சி நடவடிக்கையிலும்  ஈடுபடவில்லை என ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

சுதந்திரக்கட்சியைக் கைப்பற்றுவதற்கு குழுவொன்று  முயற்சிக்கின்றது என்றும், இந்தக்குழுவானது இரகசிய சந்திப்புகளை நடத்திவருகின்றது என்றும் தகவல்கள் வெளியாகின்.

இந்நிலையில் இது தொடர்பில் இன்று கருத்து வெளியிட்ட ரெஜினோல்ட் குரே மேலும் கூறியதாவது,

எனது வீட்டில் 18 பேர் அடங்கிய குழுவொன்று கூடி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்துவதற்கும் வேறு வழியில் கொண்டுசெல்வதற்கும் முயற்சிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

எனது வீட்டு வளாகத்தில் அவ்வாறான குழுவொன்று சந்திப்பதற்கு நான் இடம் வழங்கியது பொய். இரசியங்களை மறைத்து, சூழ்ச்சி செய்வதற்கு இல்லை என்பதை நான் மிக தெளிவாகக் கூறுகிறேன்.

அவ்வாறான சூழ்ச்சியொன்று செய்ய வேண்டுமெனின், அதுபோன்ற பிரசித்தமான இடத்தில் கூட்டம் நடாத்தும் அளவிற்கு நான் சிறு குழந்தை அல்ல.சூழ்ச்சியொன்றை நடத்துவதாயின், அந்தக் கூட்டத்திற்கு வந்தவர்களிடம் நான் கையெழுத்துக்களைப் பெற்றிருப்பேனா? இல்லையே?

இந்த கலந்துரையாடல் தொடர்பில் அன்றைய தினமே நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்கவிடம் அனைத்து விடயங்களையும் ஒழிவுமறைவின்றி தெளிவுபடுத்தினேன்.

சூழ்ச்சியொன்று இல்லாததன் காரணமாகவே எதனையும் நான் மறைக்கவில்லை. ஜனாதிபதியால் இது குறித்து வினவப்பட்டபோது, எவ்வித மறைவுமின்றி நான் அறிவித்தேன்.

2018 டிசம்பர் மாதம் 18ஆம் திகதி மாலை 3.15 மணிக்கு இந்தக் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டவுடன் ஜனாதிபதி அது குறித்து அறிந்துகொண்டார் என்பதை தெரிவித்துக்கொள்ள நான் விரும்புகின்றேன்.

இந்நிலையில், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்நோக்கும் சவால்களின் போது, அவரை கைவிடாது அவரோடு இருப்பேன் என்பதை உறுதியாக கூறிக்கொள்கின்றேன்’ எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading