Local

300 நாட்களில் 2, 368 பேர் பலி! – வீதி விபத்துகளைத் தடுக்க விழிப்படைவோம்

வீதி விபத்துக்களினால் இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 2 ஆயிரத்து 368 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு தெரிவித்துள்ளது.


உயிரிழந்தவர்களில் பாதசாரிகள் 722 பேர் அடங்குகின்றனர். கடந்த 7 வருடங்களில் வீதி விபத்துக்களில் சிக்கிய 18 ஆயிரத்து 491 பேர் உயிரிழந்துள்ளனர்.

எனவே, விபத்துகளை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்படவேண்டிய அவசர நடவடிக்கைகள் தொடர்பில் சட்டம், ஒழுங்கு அமைச்சு தீவிர கவனம் செலுத்திவருகின்றது.

அரசால் விடுக்கப்படும் அறிவிப்புகளை சாரதிகள் உரிய வகையில் பின்பற்றுவதாக தெரியவில்லை. கடுமையான சட்டங்கள் அமுலுக்கு வந்தால் அதற்கும் எதிர்பு வெளியிடுகின்றனர். இந்நிலைமை மாறவேண்டும் என்பதே சமூக ஆர்வளர்களின் கருத்தாகும்.

போருக்கு பின்னர் இலங்கையில் விபத்துகளாலேயே அதிகளவானவர்கள் உயிரிழந்துவருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading