பேஸ்புக் மூலம் சஹ்ரான் குழுவை ஆதரித்த மௌலவி விமான நிலையத்தில் சிக்கினார்!
ஈஸ்டர் தினத்தில் இலங்கையில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டவர்களைப் பகிரங்கமாக ஆதரித்து தனது முகநூலில் காணொளியூடாகக் கருத்து வெளியிட்ட மௌலவிவை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று கைதுசெய்துள்ளனர்.
வவுனியா, செட்டிகுளம், முதலியாகுளத்தைச் சேர்ந்த முகைதீன் முதாஜித் என்ற மௌலவியே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மக்கா சென்றிருந்த குறித்த மௌலவி, இன்று நாடு திரும்பி்யபோது விமான நிலையத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

