EastLead NewsLocal

பெருந்தொகையான பணத்துடன் சஹ்ரானின் சகோதரி சிக்கினார்!

தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவரும் உயிர்த்த ஞாயிறு தினமன்று கொழும்பு ஷங்ரி – லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தி உயிரிழந்த ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாதியுமான சஹ்ரான் ஹாசீமின் சகோதரி இன்று மாலை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

புதிய காத்தான்குடி, கப்பல் ஆலிம் வீதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சஹ்ரான் ஹாசீமின் சகோதரியான ஹாசீம் மதனியா (வயது – 25) என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேலும், அவரின் வீட்டில் இருந்து 20 இலட்சம் ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமைகப் பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வுத் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading