Local

மைத்திரியிடம் மன்னிப்பு கோருவாரா பொன்சேகா? ஜனாதிபதியின் நிபந்தனையால் மீண்டும் பரபரப்பு!

முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகாவுக்கு அமைச்சுப் பதவி வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேன நிபந்தனை விதித்துள்ளார் என அறியமுடிகின்றது.

தன்னை கடுமையாக விமர்சித்துவரும், சரத்பொன்சேகா பகிரங்கமாக மன்னிப்பு கோரும்வரை தனது நிலைப்பாட்டை மாற்றப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் சிலருக்கும், பொன்சேகாவுக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு ஜனாதிபதி போர்க்கொடி தூக்கியுள்ளார். இந்நிலையில், ஜனாதிபதியை சமரசப்படுத்தும் முயற்சியில் ஐ.தே.கவின் மூத்த உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading