Local

பொன்சேகாவுக்கு ‘வெட்டு’! சுதந்திர தின நிகழ்வை புறக்கணிக்க முடிவு!

காலி முகத்திடலில் எதிர்வரும் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின், 71 ஆவது தேசிய நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்வதில்லை என  முன்னாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தீர்மானித்துள்ளார்.

தமக்கு இன்னமும், அழைப்பிதழ் கிடைக்கவில்லை என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

“பீல்ட் மார்ஷல் பதவியில் இருக்கும் ஒருவருக்கு உயர் மதிப்புக் கொடுக்கும் வழக்கம் உலகம் முழுவதும் இருக்கிறது.

அவ்வாறான நிலையில் இந்தப் பதவிக்கு உரியை கௌரவம் கொடுக்கப்படா விட்டால், அத்தகைய நிகழ்வில் பங்கேற்கமாட்டேன்.” என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையின் தேசிய நாளை முன்னிட்டு நடைபெறவுள்ள அணிவகுப்புக்கான, ஒத்திகை நேற்று காலிமுகத்திடலில் இடம்பெற்றது.

இதன்போது, முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய விருந்தினர்களின் பட்டியல்  அறிவிக்கப்பட்டது. அதில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பெயர் இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாட்டில் அரசியல் சூழ்ச்சி இடம்பெற்றவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, சரத்பொன்சேக்கா கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதனால், மன்னிப்புகோரும் அவர் அவருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்போவதில்லை என்று ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே, தேசிய நாள் நிகழ்வுகளிலும் பொன்சேகாவுக்கு வெட்டு விழுந்துள்ளது.இறுதிக்கப்பட்டப்போரின்போது இராணுவத்தளபதியாக இவரே செயற்பட்டிருந்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading