Local

பாடசாலைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை!

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளையும் (22), நாளை மறுதினமும் (23) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

முதலாம் தவணைக்காக விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாக இருந்தது.

எனினும், நாட்டில் ஆறு இடங்களில் இன்று குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதால் பதற்றநிலை உருவாகியுள்ளது. இதையடுத்தே மாணவர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading