Local

இலங்கையில் ஏழு மில்லியனுக்கும் அதிக வாகனங்கள்!

நாட்டில் தற்போது ஏழு மில்லியனுக்கு மேற்பட்ட வாகனங்கள் உள்ளன. இதன் காரணமாகவே  வாகன நெரிசல் ஏற்படுவதாக பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கடுகதி பஸ் சேவையை ஆரம்பிப்பதற்கும், மென் ரயில் சேவையை ஆரம்பிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

பாராளுமன்றத்தில் இன்று ( 25) நடைபெற்ற போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சுக்கான வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு இவ்வாறு கூறினார்.

இதுதொடர்பாக மேலும் கூறியவை வருமாறு,

இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் 1950 ஆம் ஆண்டில் நாட்டு மக்களின் எண்ணிக்கை சுமார் 80 இலட்சம் ஆக காணப்பட்டது. அப்பொழுது வாகன கட்டமைப்புக்குள் மோட்டார் சைக்கிள்கள் கார்கள் பஸ்கள் அடங்கல்களாக மொத்தம் 5000 க்கு மேல் இருந்தன.

இப்பொழுது நிலைமை என்ன? எமது மக்கள் தொகைக்கு ஏற்ப 1970 ஆம் ஆண்டுக்கு பின்னர் மக்கள் தொகை மூன்று மடங்குக்கு மேலாக அதிகரித்துள்ளது. இதே போன்று வாகனங்களின் எண்ணிக்கையும் ஆயிரக் கணக்கில் அதிகரித்துள்ளது.

இன்று நாட்டில் சுமார் 7 மல்லியன் வாகனங்கள் காணப்படுகின்றன .இதன் காரணமாகவே வீதிகளில் வாகன நெரிசல்கள் காணப்படுகின்றன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நாட்டில் பெருந்தெருக்களில் வீதிகளில் வாகன நெரிசல்களின் காரணமாக இடம்பெறும் எரிபொருள் வீண்விரயங்களினால் ஏற்படும் விரயங்கள் தொடர்பில் மொறட்டுவ பல்கலைகழகங்களினால் மேற்கொண்ட ஆய்வுகளில் வரவு செலவு திட்டத்தில் இவற்றுக்காக ஒதுக்கப்படும் நிதியிலும் பார்க்க பெருந்தொகை செலவாகின்றது.

இதன் காரணமாக தற்பொழுது நெடுஞ்சாலைகள் வீதிகளை நவீனப்படுத்துவதற்கும் பெருந்தொகை செலவிடப்பட்டுள்ளது ” என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading