Jobs

 Signature விற்பனை மையங்களை இலங்கையில் முதல்முறையாக ஹட்ச் அறிமுகப்படுத்துகிறது

நிலைபேற்றியல் சார்ந்த நவீன விற்பனை மற்றும் சேவையை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட தனது பிரத்தியேக விற்பனை மையங்களை அறிமுகப்படுத்துவதன் மூலமாக நாட்டின் விற்பனைத் துறையில் பாரிய திருப்புமுனையை ஹட்ச் ஸ்ரீலங்கா நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.

 

திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் ஹட்ச் நிறுவனம் முன்னெடுத்துள்ள  இந்த முயற்சி, கணிப்பிடக்கூடிய சுற்றுச்சூழல் மற்றும் சமூக விளைவை ஏற்படுத்துவதில் வெறுமனே அடையாளத்தை மாத்திரம் வெளிப்படுத்தும் முயற்சிகளுக்கு அப்பால் சென்று, விற்பனை மையங்களில் நிலைபேற்றியலை முழுமையாக ஒருங்கிணைத்துள்ள முதன்முதல் நிகழ்வாக இது மாறியுள்ளது.

 

இலங்கையில் பாரிய அளவில் வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெறும் பிரதேசத்தில் உள்ள வணிக சமூகத்திற்கு உச்ச சேவையை வழங்குவதற்காக கொழும்பு கோட்டையில் Signature+ மற்றும் சனநெருக்கடி மிக்க நீர்கொழும்பு நகரத்தின் மையத்தில் Signature ஆகிய விற்பனை மையம் என தனது முதல் இரண்டு பிரத்தியேக விற்பனை மையங்களை ஹட்ச் திறந்து வைத்துள்ளது. இவற்றைப் போல இன்னும் பல விற்பனை மையங்களை திறந்து வைப்பதற்கும் அது திட்டமிட்டுள்ளது.

 

இந்நாட்டில் சுற்றுச்சூழல் நிலைபேற்றியல் சார்ந்த இலட்சியங்கள் வலுவடைந்து வரும் நிலையில், ஐக்கிய நாடுகளின் நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்குகளுடன் (UN-SDG) ஒன்றியவாறு பொறுப்புணர்வுமிக்க வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பைக் கொண்டுள்ள தனது Global Fortune 500 தாய்நிறுவனமான CK Hutchison குழும நிறுவனத்தின் உறுதிப்பாட்டை உள்வாங்கி, இலட்சியத்திற்கு செயல் வடிவம் கொடுக்கின்றது. சுற்றுச்சூழல் நிலைபேற்றியல் என்ற தூணின் கீழ் வடிவமைக்கப்பட்டு, புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள விற்பனை மையங்கள் நிலைபேற்றியல் கொண்ட மூலப்பொருளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதுடன், புதுப்பிக்கத்தக்க காற்று மற்றும் சூரிய எரிசக்தியின் வலுவுடன் தொழிற்படுகின்றன. இந்த விற்பனை மையங்களின் உற்பத்திச் சக்கரத்தில் சுழற்சிப் பொருளாதார முறைமையும் முன்னெடுக்கப்படுகின்றன. சுழற்சிப் பொருளாதாரத்தில் பொதுமக்களும் பங்கேற்பதை ஊக்குவிக்கும் வகையில், பாவனைக்கு உதவாத தொடர்பாடல் சாதனங்களை பொறுப்புடன் அப்புறப்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக மின்னணு கழிவு (e-waste) சேகரிப்பு ஏற்பாடுகளையும் இந்த விற்பனை மையங்கள் கொண்டுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கும் மையமாகவும் அதேசமயம் அவர்களுக்கு அறிவூட்டுகின்ற மையமாகவும் இந்த விற்பனை மையங்கள் செயற்படுவதுடன், இதற்காக தயாரிக்கப்பட்ட விளக்கப்படங்கள் மற்றும் புள்ளிவிபரங்களுடன் நிலைபேற்றியல் சார்ந்த செயற்பாடுகளை அவர்கள் அங்கு நேரடியாக கண்டறிந்து கொள்ள முடியும்.

 

ஒட்டுமொத்தத்தில், தனது Signature விற்பனை மையங்களை விரிவுபடுத்தும் அணுகுமுறையின் மூலம், நீண்டகால அடிப்படையில் மதிப்பைத் தோற்றுவித்தல், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொறுப்பு மற்றும் இலங்கையில் நிலைபேற்றியல் கொண்ட விற்பனையில் புதிய தராதரத்தை நிலைநாட்டி நடைமுறை வாழ்வில் அதனை எடுத்துக்காட்டுதல் ஆகியவற்றின் மீது தான் கொண்டுள்ள உறுதிப்பாட்டை ஹட்ச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளது.

 

இதனை அறிமுகம் செய்து வைக்கின்றமை குறித்து ஹட்ச் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சௌமித்ர குப்தா அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “CK Hutchison குழுமத்தின் நிலைபேற்றியல் சார்ந்த பயணத்துடன் இணைந்து, புத்தாக்கமும் சமூகப் பொறுப்புணர்வும் சங்கமிக்கும் விற்பனை உட்கட்டமைப்பில் திருப்புமுனையை ஹட்ச் நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. எம்மைப் பொறுத்தவரையில் நிலைபேற்றியல் என்பது இலங்கையில் தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறைகளுக்கு நீண்டகால மதிப்பை தோற்றுவிப்பதற்கான முதலீடாகும். தனித்துவமான வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்கும் அதே நேரத்தில் பொறுப்புமிக்க தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குனராக வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை நேரடியாக கிடைக்கச்செய்வதில் புதிய தர ஒப்பீட்டையும் இந்த முயற்சி நிலைநாட்டியுள்ளது. ஒட்டுமொத்தத்தில் எந்த அளவுக்கு எதிர்காலம் குறித்த சிந்தனையைக் கொண்டுள்ளது என்பதையும், தொலைத்தொடர்பாடலின் எதிர்காலத்தை எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதையும் இதன் மூலமாக ஹட்ச் நிரூபித்துள்ளது.”

 

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading