Lead NewsLocal

பரபரப்புக்கு மத்தியில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம் – இன்றிரவு ஐ.தே.க. முக்கிய கூட்டம்!

பெரும் அரசியல் பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்றம் நாளை பிற்பகல் ஒருமணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.


14 ஆம் திகதிமுதல் 16 ஆம் திகதிவரை தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நாடாளுமன்றம் கூடியிருந்தாலும் கூச்சல், குழப்பத்துக்கு மத்தியிலேயே சபை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஏற்பதற்கு ஜனாதிபதி மறுப்பு தெரிவித்துவிட்டார். இந்நிலையிலேயே நாளை நாடாளுமன்றம் கூடவுள்ளது.

அதேவேளை, சபை அமர்வு குறித்து கலந்துரையாடுவதற்காக ஐக்கிய தேசியக்கட்சி இன்றிரவு அலரிமாளிகையில் முக்கிய சந்திப்பொன்றை நடத்தவுள்ளது.இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்து எம்.பிக்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

மஹிந்த அணியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டமும் இன்றிரவு அல்லது நாளை காலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading