Local

நாடு திரும்பினார் மைத்திரி! – நாளை மீண்டும் திறக்கப்படுகிறது சு.க. தலைமையகம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரையின் பேரில் இழுத்து மூடப்பட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகம், நாளை (01) மீண்டும் திறக்கப்படவுள்ளது.

இத்தகவலை அக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுள் ஒருவரான மஹிந்த அமரவீர எம்.பி. உறுதிப்படுத்தினார்.

கொழும்பு, டார்லி வீதியில் அமைந்துள்ள சுதந்திரக்கட்சி தலைமையகம் கடந்த 26 ஆம் திகதி மூடப்பட்டதுடன், சாவிக்கொத்து மருதானை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து இவ்விவகாரம் தொடர்பில் அரசியல் களத்தில் பலகோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மஹிந்த அமரவீர,

“ தாம் தாய்லாந்தில் இருந்து திரும்பும் வரை, கட்சித் தலைமையகத்தை மூடுமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார். ஜனாதிபதி தற்போது நாடு திரும்பிவிட்டார். எனவே, கட்சி தலைமையகம் நாளை திறக்கப்படும்.

அதேவேளை,  சுதந்திரக் கட்சி தலைமையகத்தின் சாவிகள்,மருதானை பொலிஸ் நிலையத்தில் கடந்த 26ஆம் நாள் ஒப்படைக்கப்பட்டிருந்தன. இந்த சாவிகள் மறுநாள் பிற்பகல் 3.15 மணியளவில், சுதந்திரக் கட்சி பிரதிநிதிகளால் பொறுப்பேற்கப்பட்டதாக, பொலிஸ்  ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading