Local

அடுத்து என்ன? அவசரமாக நாளை கூடுகிறது சு.க.!

வரவு – செலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பு தொடர்பாக, சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவை ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன நாளை சந்தித்துப் பேசவுள்ளார்.

வரவு – செலவுத் திட்ட இரண்டாவது வாசிப்பின் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் போது, மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை.

கூட்டு எதிரணியில் இருந்த சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர்.

இந்த நிலையிலேயே நாளை ஜனாதிபதி தலைமையில் நடக்கவுள்ள சுதந்திரக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் கூட்டத்திலேயே வரவுசெலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பில் வாக்களிப்பது தொடர்பான முடிவு எடுக்கப்படவுள்ளது.

வரவுசெலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பு வரும் 05ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இதன்போது சுதந்திரக்கட்சி எதிர்த்து  வாக்களிக்கும் பட்சத்திலேயே  கூட்டணி  அமைப்பது  குறித்து  கலந்துரையாடப்படும் என ஶ்ரீலங்கா பொதுஜன  பெரமுன  அறிவித்துள்ளது.

இரு தரப்புகளுக்குமிடையிலான சந்திப்பு எதிர்வரும்  10 ஆம் திகதி  நடைபெறவுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading