Local

2019 பட்ஜட்டில் வடக்க, கிழக்கு அபிவிருத்திக்கு முக்கியத்துவம் வழங்கப்படவேண்டும்!

2019 ஆம் ஆண்டுக்காக முன்வைக்கப்படவுள்ள வரவு-செலவுத் திட்டத்தில் வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அத்துடன்  அந்தப் பகுதி மக்களின் தொழில் வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ள நடவடிக்கைவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல் நீர்வழங்கள் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம்  தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” நாட்டில் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற அரசிய குழப்ப நிலையால் நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையை ஏற்படுத்தியவர்கள் தற்போது எதிர்க்கட்சிக்கு சென்று பதவிகளை பெற்றுக்கொண்டிருக்கின்றனர்.

2007ஆம் ஆண்டு முதல் அதிகளவான நிதிகளை வெளிநாடுகளிலிருந்து கடன்களாகப் பெற்றுக்கொள்ளும் கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியே இந்நிலைக்கு காரணமாகும்” என்றும் அவர் கூறினார்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading