Sports

மழை காரணமாக கைவிடப்பட்ட இலங்கை – பாகிஸ்தான் போட்டி! – இரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளி

உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கிடையே இடம்பெறவிருந்த உலகக் கிண்ணத் தொடரின் 11 ஆவது போட்டி எதுவித பந்துகளும் வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டுள்ளது.

ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 11 ஆவது போட்டி இன்று (07) மாலை 3.00 மணிக்கு பிரிஸ்டலில் இடம்பெறவிருந்தது. இந்தநிலையில் தொடர்ந்து அங்கு மழை பெய்து வந்ததன் காரணமாக போட்டி நாணயச் சுழற்சி மேற்கொள்ளப்படாது கைவிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பாகிஸ்தான் மற்றும இலங்க‍ை அணிகளுக்கு தலா ஒவ்வொரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து புள்ளிப்பட்டியலின் அடிப்படையில் இலங்கை அணி மூன்றாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading