Local

சு.கவுடன் கூட்டணி அமைக்க தயார் ! ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி அறிவிப்பு!!

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் கூட்டணி அமைக்க தயார் என்று ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டுக்கான ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அரசியல் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (01)  கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.

இதன்போது கருத்து வெளியிட்ட பஸில் ராஜபக்ச.

” புத்தாண்டில் எந்த தேர்தல் நடத்தப்பட்டாலும் அதற்கு வெற்றிகரமாக முகங்கொடுப்பதற்கு எமது கட்சி தயார்நிலையிலேயே இருக்கின்றது. மக்கள் கூறுவார்களாயின் சு.கவுடன் கூட்டணி அமைக்கப்படும்” என்று கூறினார்.

மஹிந்த ராஜபக்சவே கட்சியை வழிநடத்துவார். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. நாட்டு மக்கள் எமது கட்சியையே விரும்புகின்றனர். எனவே, மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கவேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, தான் இன்னும் சுதந்திரக்கட்சி உறுப்பினர் என்றும், வேறு எந்த கட்சியிலும் உறுப்புரிமை பெறவில்லை என்றும் குமார வெல்கம இன்று கருத்து வெளியிட்டார்.

 

 

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading