LocalSports

35 ஓட்டங்களால் வெற்றிபெற்றது இலங்கை அணி!

இலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் டக்வத்லூயிஸ் முறைப்படி இலங்கை அணி 35 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

எதின்பேர்க்கில் (Edinburgh) இடம்பெற்ற இந்தப் போட்டியில், முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 322 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி சார்பில் திமுத் கருணாரத்ன 77 ஓட்டங்களையும், அவிஸ்க பெர்னாண்டோ 74 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தனர்.

இந்தநிலையில், தமது வெற்றி இலக்கை நோக்கி ஸ்கொட்லாந்து அணி துடுப்பாடிய நிலையில் மழை குறுக்கிட்டது.

இதற்கமைய போட்டி 34 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதுடன் வெற்றி இலக்காக 235 ஓட்டங்கள் ஸ்கொட்லாந்து அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

எனினும், அந்த அணி 33.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 199 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக இலங்கை அணி சார்பில் நான்கு விக்கட்டுக்களை கைப்பற்றிய நுவான் பிரதீப் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading