Lead NewsLocal

கொழும்பில் பெரும் துயரம்! ரயில் முன் பாய்ந்து தாயும் 2 மகன்களும் தற்கொலை!!

கொழும்பு, கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்துக்கு அருகாமையில் ரயில் முன் பாய்ந்து தாயும், இரண்டு மகன்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் அளுத்கம நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் முன் பாய்ந்தே இவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான ஜெனிட்டா தர்ஷினி இராமையா என்ற 32 வயதுப் பெண்ணும், அவரின் 08 வயது மற்றும் 12 வயது மகன்களுமே இதன்போது உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தின் பின்னர் தாயின் கைப்பையைச் சோதனையிட்ட பொலிஸார், “வாழ்வதற்கு வழியில்லை; பணமில்லை. அதனால் தற்கொலை செய்துகொள்கின்றோம்” என்று எழுதப்பட்டிருந்த கடிதமொன்றை அதிலிருந்து கண்டெடுத்தனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading