Local

வௌ்ளவத்தையில் பதற்றம்! ஓட்டோவுக்குள் வெடிபொருள்!! முப்படையினர் குவிப்பு!!! – மூவர் கைது

வெள்ளவத்தை ரயில் நிலையத்துக்கு அருகில் நேற்று மாலை  ஓட்டோ ஒன்றை சோதனைக்குட்படுத்தியபோது, சி – 4 வெடிபொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகத்துக்கிடமான குறித்த ஓட்டோவிலிருந்து சுமார் ஒரு கிலோ கிராம் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன என்று கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து, வெள்ளவத்தையில் முப்படையினர் குவிக்கப்பட்டு விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது 3 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர் என்று கடற்படையின் ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுறு சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கந்தானை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக சந்தேகத்துக்கிடமான பொதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது எனவும் கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த பொதியை பாதுகாப்பாக வெடிக்கச் செய்ததாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும், குறித்த பொதியில் எவ்வித வெடிப் பொருட்களும் காணப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடற்படையினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய, முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது குறித்த பொதி கைப்பற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading