Sports

தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் தொடர்: இலங்கை அணியிலிருந்து சண்டிமல் ‘அவுட்!’

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் சண்டிமால் நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்குப் பதிலாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான திமுத் கருணாரத்ன அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நான்கு இனிங்ஸிலும் சண்டிமால் 24 ஓட்டங்களையே பெற்றுள்ளார்.

கடந்த ஐந்து டெஸ்ட் போட்டியில் ஒரேயொரு முறை மட்டுமே அவர் ஐம்பது ஓட்டங்களைக் கடந்துள்ளார்.

அத்துடன் அவர் அண்மைக்காலமாக மூன்றாவது இடத்திலேயே துடுப்பெடுத்தாடி வருகின்றார்.

ஆனால், அவர் ஐந்து அல்லது ஆறாவது இடத்தில் களமிறங்குவதையே தேர்வாளர்கள் விரும்புகின்றனர்.

தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் டில்ருவான் பெரேரா, றொசான் சில்வா இருவரும்
நீக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்குப் பதிலாக லசித் எம்புல்தெனிய, மொகமட் சிராஸ், அஞ்சலோ பெரேரா மற்றும் ஒசா பெர்னாண்டோ அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மிலிந்த சிறிவர்தன, கவுசல் சில்வா இருவரும் மீள அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி அறிவிக்கப்பட்ட அணி விபரம் வருமாறு:-

திமுத் கருணாரத்ன (தலைவர்), நிரோன் டிக்வெல்ல (உப தலைவர்), லஹிரு திரிமன்ன, கெளால் சில்வா, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, மிலிந்த சிறிவர்தன, தனஞ்சய டி சில்வா, ஓசத பெர்னாண்டோ, அஞ்சலோ பெரேரா, சுரங்க லக்மால், கசுன் ராஜித, விஷ்வ பெர்னாண்டோ, சாமிக கருணாரத்ன, மொஹமட் சிராஸ், லக்ஷான் சந்தகன், லசித் அம்புல்தெனிய.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading