Local

‘ஜெனிவா சமர்’ – அதிகாரிகள்மட்ட குழுவையே அனுப்புகிறது கொழும்பு!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் இன்று (25)  ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்தக் கூட்டத்தொடருக்கு இலங்கையிலிருந்து உயர்மட்ட அமைச்சர்களைக் கொண்ட குழு பங்கேற்காது என தெரியவருகின்றது.

எதிர்வரும் மார்ச் 20ஆம் திகதி ஜெனிவாவில் இலங்கை குறித்த விவாதம் நடக்கவுள்ளதுடன், இலங்கை தொடர்பான புதிய தீர்மானமும் பிரித்தானியாவினால் முன்வைக்கப்படவுள்ளது.

எனினும், இந்தக் கூட்டத்துக்கு உயர்மட்ட அமைச்சர்களைக் கொண்ட குழுவை அனுப்ப வேண்டிய கட்டாயம் இல்லை என்று வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனவே, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தலைமையிலான அதிகாரிகள்மட்ட  குழுவொன்றே கலந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading