Local

அவன்கார்ட் வழக்கு: மூவருக்கு மறியல் நீடிப்பு!

அவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலை வழக்குத் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களில் மூவரை ஆகஸ்ட் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

காலி பிரதான நீதிவான் ஹர்ஷன கெகுனவெல இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார்.

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ, கருணாரத்ன பண்டார மற்றும் முன்னாள் ‘ரக்னா லங்கா’ தலைவர் விக்டர் சமரவீர ஆகியோருக்கே விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தபோது நேற்று கைதுசெய்யப்பட்ட தேசிய பொலிஸ் ஆணையத்தின் செயலாளர் சமன் திசானநாயக்க குறித்து குற்றப் புலனாய்வு பிரிவு நீதிமன்றத்துக்கு அறிவித்தது.

இந்தநிலையில் அவர் தொடர்பான மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிவான் உத்தரவிட்டார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading