Lead NewsLocal

ஊரடங்குச் சட்டம் நீக்கம்! பாதுகாப்பு உச்சம்!!

நாட்டில் நேற்று மாலை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணிக்கு நீக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அடுத்தடுத்து வெடித்த குண்டுகளை அடுத்து, பாதுகாப்புக் கருதி, நேற்று மாலை நாடு முழுவதும் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது எனப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்ததால், கொழும்பு நகரம் உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளும் நேற்று மாலை தொடக்கம் வெறிச்சோடி அமைதியாக இருந்தன.பரபரப்பாக இயங்கும் கோட்டை ரயில் நிலையப் பகுதி வெறிச்சோடியிருந்தது.

ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதை அடுத்து ரயில் மற்றும் பஸ் சேவைகள் வழமைபோல இடம்பெறும் என்று போக்குவரத்துச் சபை மற்றும் ரயில் திணைக்களம் ஆகியன அறிவித்துள்ளன.

எனினும், நாடளாவிய ரீதியிலும், குண்டுவெடிப்பு இடம்பெற்ற பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading