LocalNorth

மடு அன்னைக்கு கொடியேற்றம்!

மன்னார் மறைமாவட்ட மருதமடு அன்னையின் பெருவிழாவுக்கான கொடியேற்றம் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. பக்தர்கள் குழுமியிருக்க மன்னார் மறைமாவட்ட ஆயரால் கொடியேற்றப்பட்டு நவ நாட்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஜூலை இரண்டாம் திகதி மன்னார் மறைமாவட்டத்திலுள்ள புனித மருதமடு அன்னையின் பெருவிழா நடைபெறவுள்ளது. பெருவிழாவை முன்னிட்டு மடு பரிபாலகர் அருட்பணி. சு. ஜொ. பெப்பி சோசை அடிகளார் தலைமையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை பரிசுத்த பாப்பரசரின் கொடியையும், மடு பரிபாலகர் அருட்பணி. சு. ஜொ. பெப்பி சோசை அடிகளார் மடு அன்னையின் கொடியையும் இன்று ஏற்றிவைத்து விழாவுக்கான நவநாட்களை ஆரம்பித்து வைத்துள்ளனர்.

மருதமடு அன்னையின் பெருநாளின்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வது வழமை.

நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக இந்த வருடத் திருவிழாவின்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading