World

அதிக வயதான ‘பாட்டி யானை’ மரணம்

இந்தியாவில் வளர்ப்பு யானைகளிலேயே மிகவும் வயது முதிர்ந்ததாக கருதப்படும் தாக்ஷாயணி எனும் பெண் யானை அதன் 88-ம் வயதில் இறந்துள்ளது.

செல்லமாக ‘கஜ முதாசி’ அல்லது ‘பாட்டி யானை’ என்று அழைக்கப்பட்ட தாக்ஷயணி, இந்தியாவின் தெற்கிலுள்ள கேரள மாநிலத்தின் செங்கலூர் மகாதேவன் கோயில் சடங்குகளிலும், ஊர்வலங்களிலும் பங்கேற்றுள்ளது.

ஆனால், திடீரென உணவு உட்கொள்வதை நிறுத்திய தாக்ஷாயணி செவ்வாய்கிழமை இறந்து விட்டதாக அதன் பாகன் தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக பொது நிகழ்ச்சிகளில் இந்த யானை பங்கேற்கவில்லை.

இந்த யானை வாழ்ந்து வந்த கோயிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு, இந்த யானைக்கு 88 வயது என்ற மதிப்பிடப்படுவதால் வளர்ப்பு யானையாக அதிக வயதான யானை இதுவாகும் என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading