LocalUp Country

தலவாக்கலையில் கோரவிபத்து – 4 பேர் படுபாயம்!

தலவாக்கலையில் இடம்பெற்ற விபத்தில்  4பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தலவாக்கலை சென்.பெட்றிக்ஸ் தேவாலயத்திற்கு முன்பாக நேற்று (18) இரவு 11.30 மணியளவில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மதில் மீது மோதியதாலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

சிவனொளிபாதமலை யாத்திரையை முடித்துக்கொண்டு, நுவரெலியாவிலுள்ள உறவினர்கள் வீட்டுக்கு பயணிக்கும்வேளையிலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொழும்பு கிரிபத்கொடை பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.

வேனில் பயணித்த 8 பேரில் 4 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இதில் 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு ஏனைய 4 பேருக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லை என விசாரணைகளை மேற்கொள்ளும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

க.கிசாந்தன்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading