LocalNorth

வடமராட்சி கடற்பரப்பில் 74 கிலோ கஞ்சாவுடன் இருவர் சிக்கினார்கள்!

யாழ்ப்பாணம், வடமராட்சி கடற்பரப்பில் 74 கிலோ கிராம் கஞ்சாவுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வடமராட்சி கடற்பரப்பில் கடற்படையினரின் ரோந்து நடவடிக்கையின்போதே இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடுப் பகுதியைச் சேர்ந்த 28, 35 வயதுடைய நபர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களின் உடமையில் இருந்து 74 கிலோ கஞ்சாவை மீட்டதாக கடற்படையினர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதுடன் கைதுசெய்த நபர்களைப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

சந்தேகநபர்கள் யாழ்.மாவட்ட போதைப்பொருள் குற்றத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading