Local

வெளிநாட்டவர்கள் இருவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு!

நாட்டின் இருவேறு பகுதிகளில் வெளிநாட்டவர்கள் இருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

வென்னப்புவ மற்றும் மாத்தறை ஆகிய இரு வேறு பகுதிகளில் இவ்வாறு இருவர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

வென்னப்புவ, வேலங்கன்னி ஆலயத்திற்கு அருகில் உள்ள கடற்பகுதியில் நீராடச் சென்ற வெளிநாட்டவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

28 வயதுடைய ஜேர்மன் நாட்டவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அத்துடன் மாத்தறை, மடிஹ பகுதியில் அலையில் விளையாடிக் கொண்டிருந்த வெளிநாட்டவர் ஒருவர் அலை இழுத்துச் சென்றபோது கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

36 வயதுடைய பிரிட்டன் நாட்டவர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த இரு சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading