Lead NewsLocal

மொரட்டுமுல்லவில் துப்பாக்கிச்சூடு! இருவர் மரணம்!! ஒருவர் படுகாயம்!!!

கொழும்பின் புறநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மொரட்டுமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, மொரட்டுமுல்ல – பிலியந்தலை வீதியில் இன்று முற்பகல் 10.30 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனிப்பட்ட விரோதங்கள் காரணமாக இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரே இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

உயிரிழந்தவர்களின் வீட்டுக்கு அருகில் இந்தத் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் தந்தை மற்றும் மகனின் நண்பர் உயிரிழந்துள்ளனர். மகன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மொரட்டுமுல்ல பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading