Local

கிணற்றுக்குள் சடலங்களாக இரு இளம் சகோதரிகள் மீட்பு! – கொலையா எனப் பொலிஸார் விசாரணை

மஹவிலச்சிய, எலபத்கம பகுதியில் காணாமல்போயிருந்த சகோதரிகளான இரு யுவதிகள் கிணறு ஒன்றிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த இரு சகோதரிகளும் நேற்றுமுன்தினம் வீட்டுக்கு அருகில் உள்ள குடா தம்மென்னாவ குளத்துக்குக் குளிக்கச் சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்தனர்.

இதனையடுத்து அவர்களது பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளமையை அடுத்து தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இந்தநிலையில், குளிக்கச் சென்ற குளத்துக்கு அருகிலிருந்து அவர்கள் எடுத்துச் சென்ற உடைகள் மீட்கப்பட்டன. அதற்கு அருகில் உள்ள கிணற்றிலிருந்து இருவரின் சடலங்களும் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

22 வயது மற்றும் 26 வயதுடைய சகோதரிகளே உயிரிழந்துள்ளனர்.

குறித்த சகோதரிகள் கொலை செய்யப்பட்டுள்ளார்களா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading