Lead NewsLocalNorth

பஸ்ஸின் பின்னால் மோ.சைக்கிள் மோதி இரண்டு இளைஞர்கள் பரிதாபமாகப் பலி! – கிளிநொச்சியில் இன்று மாலை துயரம்

வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பஸ்ஸுக்குப் பின்புறமாகச் சென்று மோதி ஏற்பட்ட விபத்தில் இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் கிளிநொச்சி இரணைமடுச் சந்திக்கு அருகாமையில் 247 கட்டைப் பகுதியில் இன்று சனிக்கிழமை மாலை 6 மணியளவில் இடம்பெற்றது.

கிளிநொச்சி ஊற்றுப்புலத்தைச் சேர்ந்த குமார் டனுசன் (வயது – 19), கந்தசாமி கஜானன் (வயது – 19) ஆகிய இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் பயணித்த பஸ்ஸுக்குப் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பஸ்ஸுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது. அதில் பயணித்த இருவரும் உயிரிழந்தனர்.

இவர்கள் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுபவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

இலக்கத்தகடு பொருத்தப்படாத புத்தம் புதிய மோட்டார் சைக்கிளே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.

இவர்களது சடலங்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகைளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading