Lead NewsLocal

இலங்கைமீது ஐ.நா. கழுகுப்பார்வை! – கொழும்பு விரைகிறார் செயலர்

ஐ.நா பொதுச் செயலர்  அன்ரனியோ குரெரெஸ், விரைவில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளலாம் என்று ஐ.நா அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கடந்த வாரம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்த போது  கொழும்பிலுள்ள ஐ.நா பிரதிநிதிகள் இதனைக் கூறியுள்ளனர்.

இப்போது ஐ.நா கவனம் செலுத்தி வரும் நாடுகளில் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஐ.நா  பிரதிநிதிகள் தம்மிடம் கூறியதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஐ. நா பொதுச் செயலர் விரைவில் இலங்கைக்கு பயணம் செய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் தம்மிடம் தெரிவித்தனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading