Local

அரசியல் முரண்பாட்டை முடிவுக்கு கொண்டுவாருங்கள் – ஐ.நா. வலியுறுத்து

இலங்கையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி, அமைதியாக, அரசியலமைப்பு நெறிமுறைகளுக்கு அமைய தீர்க்கப்பட்டிருப்பதை ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரஸ் வரவேற்றுள்ளார்.

இதுதொடர்பில் நியூயோர்க்கில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக்,

“இலங்கையின் ஜனநாயக அமைப்புகளின் ஆற்றலை ஐ.நா பொதுச்செயலர் பாராட்டுகிறார்.ஜனநாயகத்தை மதிப்பது மற்றும் மக்களின் நலன்களுக்காக, நாட்டில் உள்ள அனைத்து தரப்புகளும், அரசியல் வேறுபாடுகளை தீர்ப்பதற்கு புதிய அமைச்சரவை நியமனத்தின் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading