ஜனாதிபதியின் கோரிக்கையையடுத்து சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கம்!
கடந்த 21ஆம் திகதி இலங்கையில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்களையடுத்து சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்ட தடை சற்றுமுன்னர் நீக்கப்பட்டது.
சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்ட தடையை உடன் நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிடம் இன்று காலை கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கப்பட்டது.
