Jobs

Union Bank வாடிக்கையாளர்களுக்காக பிரத்தியேக அமர்வுகளை Union Assurance! முன்னெடுப்பு

இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குநரான யூனியன் அஷ்யூரன்ஸ், யூனியன் வங்கியுடனான தனது பாங்கசூரன்ஸ் பங்காண்மையை மேலும் வலுப்படுத்தும் வகையில், பிரத்தியேகமான வாடிக்கையாளர் அமர்வுகள் தொடரை முன்னெடுக்கின்றது. இதன் பிந்திய அமர்வுகள் யாழ்ப்பாணம் மற்றும் மாத்தறையில் முன்னெடுக்கப்பட்டன. இதில் யூனியன் வங்கி பாங்கசூரன்ஸ் வலையமைப்பைச் சேர்ந்த 100க்கும் அதிகமான யூனியன் அஷ்யூரன்ஸ் வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கியின் புதிய வாடிக்கையாளர்களும் கலந்து கொண்டனர்.
வாடிக்கையாளர்களின் நிதிசார் நலனை மேம்படுத்துவதில் இந்த அமர்வுகள் கவனம் செலுத்துகின்றன. பிரயோக அறிவு மற்றும் செயற்படுத்தக்கூடிய மூலோபாயங்களினூடாக, வாடிக்கையாளர்களுக்கு தகவலறிந்த நிதிசார் தீர்மானங்களை மேற்கொள்ள அறிவூட்ட யூனியன் அஷ்யூரன்ஸ் எதிர்பார்ப்பதுடன், அதனூடாக முன்னேற்றத்துக்கான அவர்களின் பயணத்துக்கு வலுவூட்டவும் எதிர்பார்க்கின்றது.  மேலும், இந்த அமர்வுகளினூடாக வாடிக்கையாளர்களுக்கு யூனியன் அஷ்யூரன்ஸ் மற்றும் யூனியன் வங்கி ஆகியவற்றின் சிரேஷ்ட முகாமைத்துவத்தைச் சேர்ந்தவர்களுடன் நேரடியாக தொடர்பை பேணுவதற்கான வாய்ப்பையும் வழங்கியிருந்தன. நிறுவனங்களுடன் அர்த்தமுள்ள வகையில் தொடர்புகளை ஏற்படுத்தவும், தமது உறுவுகளை வலிமைப்படுத்தவும் வாய்ப்பை வழங்கியிருந்தன.
அமர்வுகள் தொடர்பில் யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம பங்காண்மை விநியோக அதிகாரி வத்சலா அளுத்கெதர கருத்துத் தெரிவிக்கையில், “எமது வாடிக்கையாளர்களின் நலனுக்கு தொடர்ச்சியாக ஆதரவளிக்கும் கட்டமைப்புகளை பெற்றுக் கொடுத்து பாங்கசூரன்ஸ் துறையில் புதிய நியமங்களை ஏற்படுத்துவதற்கான யூனியன் அஷ்யூரன்ஸின் நீண்ட கால அர்ப்பணிப்பின் எடுத்துக்காட்டாக இந்த வாடிக்கையாளர் அமர்வுகள் அமைந்துள்ளன. இந்த அமர்வுகளை முன்னெடுப்பதில் எமது நீண்ட கால பங்காளர்களில் ஒன்றாக யூனியன் வங்கியுடன் கைகோர்த்துள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். அதனூடாக எமது பகிரப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள பரிபூரண சேவைகளை பெற்றுக் கொடுக்க முடிந்துள்ளது.” என்றார்.
யூனியன் வங்கியின் நுகர்வோர் வங்கியியல் பிரிவின் சிரேஷ்ட உப தலைவர் சாயா ஜயவர்தன கருத்துத் தெரிவிக்கையில், “எமது வாடிக்கையாளர்களுக்கு பெருமளவில் அனுகூலமளிக்கக்கூடிய ஒரே கூரையின் கீழான பரிபூரண தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதில் யூனியன் அஷ்யூரன்ஸ் கவனம் செலுத்துகின்றது. இந்நிலையில் யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்துடன் எமது பாங்கசூரன்ஸ் பங்காண்மையை ஏற்படுத்தியுள்ளதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். நிதிசார் அறிவை மேம்படுத்தும் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதனூடாக, எமது வாடிக்கையாளர்களின் நிதிசார் நிலையில் ஏற்படுத்தும் தாக்கத்தை நாம் நன்கு உணர்ந்துள்ளோம். சிறந்த பெறுமதி மற்றும் மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் உறவுகளை பெற்றுக் கொடுப்பதற்கான எமது அர்ப்பணிப்பை இந்த அமர்வுகளின் வெளிப்படுத்தியுள்ளன.” என்றார்.
7 துறைகளில் 70க்கும் அதிகமான நிறுவனங்களைக் கொண்டு, கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மாபெரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன், 2024 ஜுன் மாத இறுதியில் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 28.6 பில்லியனையும், ஆயுள் நிதியமாக ரூ. 71.6 பில்லியனையும் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 3,000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading