Local

24 இல் கூடுகிறது ஐ.தே.க. மத்திய செயற்குழு! – கொழும்பில் முகாமிடுமாறு எம்.பிக்களுக்கு பணிப்புரை

ஐக்கிய தேசியக்கட்சியின் மத்தியசெயற்குழுக் கூட்டம் எதிரவரும் 24 ஆம் திகதி கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.

கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெறும் இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு மத்திய செயற்குழு உறுப்பினர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

மாகாணசபைத் தேர்தல், புதிய அரசியலமைப்பு  உட்பட மேலும் சில விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐ.தே.கவின் பின்வரிசை எம்.பிக்களால் இதன்போது விசேட யோசனையொன்று முன்வைக்கப்படவுள்ளது.

குறித்த யோசனை என்னவென்பதை அடுத்தவாரத்தில் பின்னிலை எம்.பிக்கள் அறிவிக்கவுள்ளனர்.

அதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சியின் எம்.பிக்களுக்கு 23 ஆம் திகதி இரவு அலரிமாளிகையில் இராபோசன விருந்து வழங்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாட்டை கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க செய்துள்ளார்.

 

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading