Jobs

நடனக் கலைஞர் சன்ன விஜேவர்தன Diabetasol வர்த்தக நாமத்தின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்

பிரபல நடனக் கலைஞரும் நாடக நடிகருமான இவர், Diabetasol வர்த்தக நாமத்துடன் உத்தியோகப்பூர்வமாக இணைந்துள்ளார்

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் சமநிலை, ஒழுக்கம் மற்றும் சிறப்பு ஊட்டச்சத்துக்காக “Keep Life in Rhythm” திட்டம் தொடங்கப்பட்டுள்ளது

சர்வதேச புகழ்பெற்ற ‘சன்ன-உபுலி’ கலை நிறுவனத்தின் நிறுவுனர் மற்றும் படைப்பு இயக்குநரான கலைஞர் சன்ன விஜேவர்தன அவர்கள், Diabetasolஇன் புதிய தேசிய விளம்பரத் திட்டமான “Keep Life in Rhythm”-இன் உத்தியோகப்பூர்வ வர்த்தக நாம தூதராக அண்மையில் அறிவிக்கப்பட்டார்.

ஒவ்வொரு நபரும் தாம் விரும்பிய வாழ்க்கையை வாழ்கிறார்கள்; விரும்பியதை உண்கிறார்கள், விரும்பியவர்களுடன் பழகுகிறார்கள், விரும்பியதைச் செய்கிறார்கள். ஆனால் நீரிழிவு நோய் காரணமாக இவை அனைத்தையும் இழக்க நேரிடும் என்று ஒருவர் நினைக்கலாம். “Keep Life in Rhythm” திட்டம், அவர்களின் அந்த எண்ணத்தை சவாலுக்கு உட்படுத்தி, நீரிழிவு நோயால் ஒருவரின் வாழ்க்கை வரம்புக்குட்படுத்தப்படக் கூடாது என்பதை வலியுறுத்துகிறது. மாறாக, சரியான வாழ்க்கை சமநிலை, ஒழுக்கம் மற்றும் ஊட்டச்சத்தை பராமரிப்பதன் மூலம் வாழ்க்கையை இயல்பாகவே தொடர்ந்து கொண்டு செல்ல முடியும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.

Diabetasolஇன் இந்த நோக்கத்தை சரியான முறையில் தனது வாழ்க்கையுடன் இணைத்துக்கொண்டு, உண்மையான ஆரோக்கியமான வாழ்க்கையை வாழும் ஒருவராக சன்ன விஜேவர்தனவைக் குறிப்பிடலாம். நாட்டின் மிகுந்த மரியாதைக்குரிய நடனக் குழுவொன்றின் படைப்பாளராக, அவரது முழு வாழ்க்கையும் கடுமையான உடல் ஒழுக்கம் மற்றும் தொடர்ந்து பராமரிக்கப்படும் உயர் ஆற்றல் மீதே கட்டமைக்கப்பட்டுள்ளது. நீரிழிவு நோய் வந்தவர் தனது வாழ்க்கையை தடைசெய்துகொள்ள வேண்டும் அல்லது பின்னோக்கிச் செல்ல வேண்டும் என்ற பொதுவான சமூகக் கருத்துக்கு, அவரது சுறுசுறுப்பான வாழ்க்கை முறை சிறந்த பதிலாக அமையும் என்பது உறுதி. பொதுமக்கள் முன் அவர் இன்னமும் முன்புபோலவே கலையில் ஈடுபட்டுள்ளார், மேலும் இந்த சுறுசுறுப்பான பங்களிப்பு, திட்டத்தின் செய்தியை மக்களுக்கு மிகவும் நம்பகமான முறையில் வழங்க உதவும்.

இது குறித்து கருத்து தெரிவித்த சன்ன விஜேவர்தன அவர்கள், “நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவது என்பது வாழ்க்கையை சரியான முறையில் சமநிலையாக பராமரிப்பதாகவே நான் கருதுகிறேன். அதில் நான் எடுக்கும் முடிவுகள் மற்றும் உணவுப் பழக்கங்கள் குறித்து கடுமையான சுய-ஒழுக்கத்தை பராமரிப்பதும், எனது உடலைப் பற்றி அக்கறை கொள்வதும் மிக முக்கியமானது. எனது தொழில் நடவடிக்கைகள், நான் விரும்புவது மற்றும் எனது அன்றாட சாதாரண வாழ்க்கையை அதேபோலவே அனுபவிப்பதற்கு நான் இன்னமும் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். நீரிழிவு நோயை நான் மிகவும் வெற்றிகரமாக நிர்வகிக்கிறேன், அது எனது அடையாளத்தையோ நான் யார் என்பதையோ தீர்மானிக்க நான் அனுமதிக்கவில்லை” என்று கூறினார்.

இது குறித்து கருத்து தெரிவித்த Kalbeஇன் ஊட்டச்சத்து தலைவரும் தகுதியான ஊட்டச்சத்து நிபுணருமான கிஷான் கணகசபை அவர்கள், “ஆரோக்கிய சமநிலையை பராமரிப்பதற்கு ஊட்டச்சத்து மிக முக்கியமானதும் முதன்மையான பங்கை வகிக்கிறது. ஊட்டச்சத்தைப் பெறுவதற்கு எடுக்கும் முடிவும், அதற்காக தேர்ந்தெடுக்கும் ஊட்டச்சத்து மூலங்களும் இதில் சமமாக முக்கியமானவை” என்று கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், “நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் ஊட்டச்சத்து பானத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, அதன் ஊட்டச்சத்து தன்மை குறித்து மட்டும் கவனம் செலுத்தக்கூடாது. ஒரே ஊட்டச்சத்து முறை அனைவருக்கும் ஒரே மாதிரியாகப் பொருந்தும் என்ற பழைய கருத்திலிருந்து அறிவியல் ஆராய்ச்சிகள் இப்போது மிகவும் முன்னேறியுள்ளன. எனவே, நீரிழிவு நோயை வெற்றிகரமாக நிர்வகிக்கும் ஒருவருக்கு இந்த தொழில்நுட்ப மாற்றத்தைப் புரிந்துகொள்வது மிக முக்கியமானது” என்றும் கூறினார்.

Diabetasol ஆனது நீரிழிவு நோயாளிகளின் இந்தத் தனித்துவமான தொழில்நுட்பத் தேவைகளை நன்கு கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இரத்தத்தில் சர்க்கரை உடனடியாக உறிஞ்சப்படுவதைத் தடுக்கும் குறைந்த கிளைசெமிக் குறியீடு, அதிக புரத சதவீதம், உணவு நார்ச்சத்து, கூடுதலாக சேர்க்கப்பட்ட சுக்ரோஸ்/சர்க்கரை இல்லாத தன்மை, அத்துடன் அத்தியாவசிய விற்றமின்கள் மற்றும் பல தாது உப்புகள் இதில் அடங்கும். இவை அனைத்தும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட ஊட்டச்சத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளன.

உலகளவில் 30 ஆண்டுகளுக்கும் மேலான மருத்துவ ஊட்டச்சத்து அனுபவத்துடன், இலங்கையில் 10 ஆண்டுகளுக்கும் மேலான நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ள Diabetasol வர்தத்தகநாமம், ஊட்டச்சத்து மற்றும் அன்றாட வாழ்க்கையை சமநிலையாக பராமரிப்பதற்கான ஒரு சுகாதார தீர்வாகக் குறிப்பிடலாம். 2026 ஆம் ஆண்டில் தனது 60 ஆண்டுகள் செயல்பாட்டை நிறைவு செய்யும் Kalbe, Hemas Pharmaceuticals உடன் இணைந்து Diabetasol-ஐ இலங்கை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

“Keep Life in Rhythm” விளம்பரத் திட்டம் அனைவருக்கும் விடுக்கப்படும் ஒரு திறந்த அழைப்பாகும். அதாவது, தமது ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்ளும் அதே வேளையில், தாம் மிகவும் விரும்பும் மற்றும் ஆர்வமுள்ள செயல்களைத் தொடர்ந்து செய்வதற்கு இது வழிகாட்டுகிறது. சன்ன விஜேவர்தன அவர்களின் உண்மையான வாழ்க்கையைப் போல, ஒரு நோய் நிலை கண்டறியப்பட்டாலேயே தமது வாழ்க்கையின் பயணமோ அல்லது வேகமோ நின்றுவிடக் கூடாது. சரியான வாழ்க்கை சமநிலையின் மூலம், வாழ்க்கையின் வழக்கமான தாளம் எந்தத் தடையுமின்றி தொடர்ந்து முன்னோக்கி ஓடிக்கொண்டிருக்கும்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading