Local

10 ஆம் திகதி அதிரடி! களுத்துறையில் ‘மாஸ்காட்ட’ தயாராகிறது ஐ.தே.க.!!

‘சிறிகொத்தவை கிராமத்திற்கு கொண்டு செல்லும்’ வேலைத்திட்டத்தை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (10) களுத்துறை மாவட்டத்தில் முன்னெடுப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டுள்ளது.

இதன்படி, கட்சித் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் அனைத்து அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும், பிரதேச அரசியல் வாதிகளும் களுத்துறையில் அணிதிரளவுள்ளனர்.
களுத்துறை மாவட்டத்தில் உள்ள தேர்தல் தொகுதிகளான களுத்துறை, புளத்சிங்கள,பண்டாரகம,மத்துகம,அகலவத்தை,ஹொரண மற்றும் பேருவளை ஆகியவற்றில் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் வீடு வீடாக சென்று மக்களுடன் சுமுகமாக கலந்துரையாடவுள்ளனர்.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் கிராமங்களில் உள்ள கட்சி கிளைகளை ஸ்தாபித்தல், புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளுதல், கட்சி ஆதரவாளர்களின் பிரச்சினைகளை கேட்டறிதல் மற்றும் அதற்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுத்தல் போன்ற பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளன.
இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் காலங்களில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முன்னெடுக்கவுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading