Local

உயர்நீதிமன்ற தீர்ப்பால் ஐ.தே.க. ஆதரவாளர்கள் குதூகலம் – பட்டாசுக் கொளுத்தி கொண்டாட்டம்!

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முடிவுக்கு உயர்நீதிமன்றத்தால் இன்று இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

உயர்நீதிமன்றத்தை அண்மித்த பகுதிகளிலும் நாட்டின் ஏனைய சில இடங்களிலும் இவ்வாறு பட்டாசு வெடித்து, தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன், இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என்றும் பெருமிதம் கொண்டுள்ளனர்.

அதேவேளை, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இடைக்கால நிவாரணம் என்று சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading