Local

ரணிலின் ஆசியுடனேயே ஜனாதிபதியை சஜித் சந்தித்தார் – ஐ.தே.க. அறிவிப்பு!

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அறிவித்துவிட்டே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திப்பதற்கு சஜித் பிரேமதாச சென்றிருந்தார் என்று ஐக்கிய தேசியக்கட்சி இன்று அறிவித்தது.


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஐக்கிய தேசியக்கட்சியின் உப தலைவரான சஜித் பிரேமதாச இரகசியமாக இரகசியமாக சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார் என ஊடகங்களில் செய்திகள் வெளியானதையடுத்தே – விசேட அறிக்கையொன்றை விடுத்து இத்தகவலை ஐ.தே.க. வெளியிட்டுள்ளது.

“ பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெரியப்படுத்திவிட்டே, ஜனாதிபதியை சந்திக்க சஜித் பிரேமதாஸ சென்றிருந்தார் என்பதுடன், இங்கு பேசப்பட்ட விடயங்கள் குறித்து சந்திப்பின் பின்னர் அவர், ரணில் விக்கிரமசிங்கவுக்கு அறியப்படுத்தினார்” என்றும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading