LocalNorth

சுமந்திரன், விஜயகலா தலைமையில் வடமராட்சி கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

யாழ். மாவட்டம், வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) மருதங்கேணி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

இணைத்தலைவர்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இதில் மருதங்கேணி பிரதேச செயலர் க.கனகேஸ்வரன், பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் அ.சா. அரியகுமார், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான ச.சுகிர்தன், கே.சயந்தன், யாழ்.மாவட்ட திணைக்களங்களின் தலைவர்கள், பருத்தித்துறை பிரதேச சபையின் உப தவிசாளர் கு.தினேஷ், பருத்தித்துறை பிரதேச சபையின் வடமராட்சி கிழக்கு வட்டாரங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள், மருதங்கேணி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

வடமராட்சி கிழக்கின் அபிவிருத்திகள் தொடர்பில் இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டன. ஏற்கனவே அபிவிருத்திகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் இதன்போது அங்கீகரிக்கப்பட்டன.

 

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading