Local

புதுடில்லி சென்றடைந்த மைத்திரிக்கு வரவேற்பு!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது தடவை பதவிப் பிரமாண வைபவத்தில் கலந்துகொள்வதற்காக இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் இன்று (30) நண்பகல் புதுடில்லி நகரைச் சென்றடைந்தார்.

புதுடில்லியிலுள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்த ஜனாதிபதியை இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர்.

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஒஸ்ரின் பெர்னாண்டோ உள்ளிட்ட தூதரகப் பணிக்குழாமினரும் இந்தநிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்டரபதி பவனில் இன்றிரவு நடைபெறவுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் பதவிப் பிரமாண வைபவத்தில் ஏனைய வெளிநாட்டு தலைவர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்குபற்றவுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading