Lead NewsLocal

விமலின் மூளையை பரிசோதனை செய்க! – நாடாளுமன்றில் ரிஷாத் கோரிக்கை

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் மூளையைப் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் சபையில் கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது:-

“எனது தாயாரின் சகோதரர் ஒருவரின் உறவினர் தெமட்டகொடையில் நடந்த வெடிப்புச் சம்பவத்துக்குக் காரணம் என விமல் வீரவன்ச இங்கு குற்றஞ்சாட்டியுள்ளார். எனது தாயாருக்கு சகோதரர்கள் கிடையாது. தொடர்ந்து பொய்களைக் கூறிவரும் விமல் என் மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எந்த முறைப்பாட்டையும் இதுவரை செய்யவில்லை. அவரின் பொய் அளவில்லாமல் போய்க்கொண்டுள்ளது. என் மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கின்றேன். இப்படி பொய் சொல்லும் விமலின் மூளையை பரிசோதனை செய்ய வேண்டும் என நான் கோரிக்கை விடுக்கின்றேன்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading