Up Country

மாயமானபெண் சடலமாக மீட்பு! பலகோணங்களில் பொலிஸார் விசாரணை

மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போன பெண், மாவெலி ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நாவலப்பிட்டி பொலிஸ் , பலந்தொட்ட பகுதியை சேர்ந்த 84 வயதுதுடைய நான்கு பிள்ளைகளின் தாயாரான  எம். ஈனிமெனிகே என்பவரே  இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன் தனது சொந்த  தேயிலை தோட்டத்திற்கு சென்ற போதே காணாமல் போனார் என  உறவினர்களால் நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டது.
இந்  நிலையில் பொலிஸ் மோப்ப நாயின் உதவியுடன் பொலிஸாரும் பிரதேசவாசிகளும்  தேடுலில் ஈடுட்டிருந்த வேலையில் தேயிலை தோட்டத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர்தூரத்திலிருந்து மாவெலி    ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்படுள்ளார்.
மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதணைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர் .
நோட்டன்  பிரிட்ஜ்  நிருபர்  எம் கிருஸ்ணா,

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading