Local

அரசியல் நெருக்கடி உக்கிரம் – தலையிடுகிறது சங்கசபை! ஜனாதிபதிக்கு அவசரகடிதம்!

ஜனநாயகத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நாடாளுமன்றத்தின் ஊடாக அரசியல் குழப்ப நிலைமைக்கு தீர்வை முன்வைக்குமாறு மல்வத்து மகாநாயக்க தேரர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவசர கடிதமொன்றை அனுப்பு வைத்துள்ளார்.

நாட்டின் அரசியல் நிலைமை மேலும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள நிலையில், விரைவாக தீர்வை முன்வைக்க வேண்டியதன் அவசியம் தொடர்பில் மல்வத்து மகாநாயக்க தேரர் வலியுறுத்தியுள்ளார்.

“நாடாளுமன்றத்தின் ஊடாக அரசியலமைப்புக்கு முரணற்ற வகையில் தீர்வை முன்வைக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். ஆகையால் அதனையும் கருத்திற்கொண்டு தீர்வை முன்வைக்கும் நடவடிக்கையை ஜனாதிபதியாகிய நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.

அத்தகைய சிறந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாயின் நாமும் ஆலோசனைகளை வழங்குவதற்கு தயாராகவுள்ளோம்” எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading